.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் சிவகாமி அம்பாள் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் கோவிலில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் புஷ்பக விமானம், பூத வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், இந்திர வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி சிவகாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சுவாமி சிவகாமியம்மாள் திருத்தேரில் எழுந்தருளினார்.
ஓய்வு பெற்ற ஐ.ஜி மாசானமுத்து, தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் மற்றும் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரடி வீதிகளை சுற்றி வந்த தேர் காலை 11.30 மணியளவில் நிலையம் வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.