டாக்டர்.கி.செந்தில்ராஜ், அரும் பெரும் செயலை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் 2020&-2021ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கான தேசிய அளவிலான விருது தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம். மிகவும் சிறப்பான மாவட்டம். தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் இந்த மாவட்டம், துறைமுகத்தினால் சிறப்பு பெற்றது. தென்னகத்தின் வெட்டுவான் கோயில், கழுகுமலை சமணர் சிற்பம், திருச்செந்தூர் முருகன் கோயில், மணப்பாடு சர்ச், காயல்பட்டணம் மசூதி என பல சிறப்புகளை கொண்ட இந்த மாவட்டத்திற்கு தாமிரபரணி பாசனம் மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.
முப்போகம் விளையும் நிலையில் உள்ள இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகளும் மிகச்சிறப்பாக உள்ளது. கடந்த 150 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி வற்றாமல் இருக்க பொதிகைமலையில் மரங்களை வெட்ட கூடாது என வெளிநாடு சென்று நீதிமன்ற ஆணை பெற்று, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிய ஆங்கிலேய கலெக்டர் பக்கிள்துரை உருவாக்கிய பேய்குளம் விவசாய சங்கம் இந்த ஆண்டு தனது 150&வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
இந்த வேளையில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார் டாக்டர் கே.செந்தில்ராஜ் அவர்கள். இவர் பதவியேற்றவுடன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொற்காலம் என சொல்லலாம். ஒவ்வொரு பணியும் மிகச்சிறப்பாக நடந்தது. உலகத்தரம் வாய்ந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்து இந்தியாவிலேயே மத்திய அரசு அறிவித்த ஐந்து திட்டங்களில் முதல் முதலாக ஆதிச்சநல்லூரில் பணி நடைபெற காரணமாக இருந்தார். இதனால் ஒட்டுமொத்த தொல்லியல் ஆர்வலர்கள் ஆதரவையும் அவர் பெற்றார். ஏழை எளிய குடிமக்களையும் இவர் விடுவதில்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள விட்டில் வசித்து வந்த ஆழிகுடியை சேர்ந்த ஊனமுற்றோர் வாலிபர் மற்றும் ஆதரவற்ற அவர் தாயார் வாழ்ந்த குடும்பத்துக்கு அனைத்து நலனும் கிடைக்க அதிரடி நடவடிக்கை எடுத்து ஏழை எளியோர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதோடு மட்டுமல்லாமல் வாக்காளர் விழிப்புணர்வில் மிகவும் கவனம் செலுத்தினார்.
மிகவும் சுறுசுறுப்பாய வலம் வரும் இவர் யார். அவரைப் பற்றி முதலில் அறிவோம். தமிழ்நாடு கேடரின் 2012 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி இவர். திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படித்து முடித்திருந்தாலும், ஐ.ஏ.எஸ் பதவி இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே இப்பதவியை தேர்ந்தொடுத்தார்.
வேலூர் மாவட்டத்தில் மாவட்டப் பயிற்சியை முடித்த பிறகு, 2014ல் திருப்பூரில் சப் கலெக்டராக முதல் பணியை தொடங்கினார். 2015 முதல் 2017 வரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சப் கலெக்டராகப் பணியாற்றினார். தமிழகத்தின் திட்ட இயக்குநராகவும், உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை ஸ்டேட் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் 2017 முதல் 2019 வரை இந்திய மருத்துவம் ஹோமியோபதி ஆணையராக பணியாற்றினார். பின்னர் அவர் மாவட்ட ஆட்சியராக சேர்வதற்கு முன்பு 2019-2020&க்கு இடையில் தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் மிஷன் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின் 15.11.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக தனது பணியை தூத்துக்குடியில் தொடங்கினார். இவர் பதவியேற்றவுடனே 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் மாவட்ட நிர்வாகம் இயங்கிக் கொண்டிருந்தது. எனவே சிறப்பு பட்டியல் திருத்த முகாமை மிகச்சிறப்பாக நடத்தினார். இதற்காக வாக்காளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து அதிகாரிகளையும் முடுக்கி விட்டார். இதற்கான சிறப்பு கூட்டங்களை நடத்தினார். இவரின் முயற்சி வாக்காளர்களில் இளம் வாக்காளர் சேர்க்கை, மாற்றுதிறனாளி வாக்கு அளித்தல், முதியோர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் கருத்தை விளம்பரம் மூலம் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றார்.
இதற்காக அதிகமான விழிப்புணர்வு படங்கள் எடுக்கப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு வாக்களிக்க ஒரு செயலி உள்ளது என்பதை உணர்த்தும் வண்ணம் விழிப்புணர்வு படம் ஒன்றை எடுத்து, பட்டிதொட்டிகளுக்கெல்லாம் அரசு விழிப்புணர்வு வாகனத்தினை அனுப்பினார். அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் நின்று இந்த படத்தினை ஒளிபரப்பு செய்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு கேபிள் டிவியிலும் ஒளிபரப்பபட்டது. அதுபோலவே இளம் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களிக்க வேண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி முக்கியத்தும், குறித்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடவடிக்கை எடுத்தார். இவர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்.
முதியோர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிக்ளுக்கு அவர்கள் வசிக்கும் பாதுகாப்பகங்களுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றிலேயே முதல் முதலாக அரசு ஊழியர்களை போலவே வீட்டில் இருந்து படியே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாககளித்தனர். இந்த காரியம் மிகப்பெரிய சாதனையாக விளங்கியது.
இதனால் வாக்களிப்போர் எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்தது.
டாக்டர்.கி.செந்தில்ராஜ், அரும் பெரும் செயலை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் 2020&-2021ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கான தேசிய அளவிலான விருது தேசிய வாக்காளர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
இந்த விருது தூத்துக்குடி மாவட்டத்துக்கு மேலும் ஒரு மணி மகுடம். தொடர்ந்து இதே போல் பல்வேறு விருதுகளை நமது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற வேண்டுகிறோம்.


