உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தற்போது மத்திய தொல்லியல் துறை சார்பாக உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக திருச்சி மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. ஒரே இடத்தில் 23 க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் அகழாய்வில் வெளிப்பட்டது. இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இரும்புகாலத்தினை சேர்ந்தது ஆதிச்சநல்லூர் என்பதை இயற்கனவே ஆய்வாளர்கள் நிருபித்து உள்ளனர். தற்போது அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் அகழாய்வு நடந்து வருகிறது. இவ்விடத்துக்கு பெங்களூர் நியாஸ் நிறுவனத்தினை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்ய வந்தனர். தொல்லியல் உலோகவியல் ஆய்வாளர் சாரதா ஸ்ரீனிவாசன் தலைமையில் இங்கு வந்தவர்கள் ஆய்வு செய்த இடத்தில் உலோக பொருள்களை சேகரித்தனர். இதுகுறித்து சாரதா ஸ்ரீனிவாசன் கூறும்போது, நாங்கள் சேகரித்த பொருள்களை ஆய்வு செய்வோம். ஆதிச்சநல்லூரில் இரும்பு காலத்தின் தடயங்கள் பற்றிய விவரங்களை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் அவர்களுடன் இணைந்து வெளியிடுவோம் என்றார்.
அவருடன் நியாஸ் நிறுவனத்தில் ஆவண அலுவலர் பாலாஜி , தொல்லியல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் வந்தனர். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இடங்களை ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொல்லியல் ஆய்வாளர்கள் எத்தீஸ் குமார், முத்துகுமார், வரைவாளர் ராகவேந்திரா ஆகியோர்காட்டினர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் இயககுனர் பேராசிரியர் சுதாகர், தூத்துககுடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, எழுத்தளார் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


