உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் தற்போது மத்திய தொல்லியல் துறை சார்பாக உலக தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக திருச்சி மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. ஒரே இடத்தில் 23 க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் அகழாய்வில் வெளிப்பட்டது. இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இரும்புகாலத்தினை சேர்ந்தது ஆதிச்சநல்லூர் என்பதை இயற்கனவே ஆய்வாளர்கள் நிருபித்து உள்ளனர். தற்போது அதை மேலும் நிரூபிக்கும் வண்ணம் அகழாய்வு நடந்து வருகிறது. இந்த இடத்தினை தமிழ், வரலாறு, தொல்லியல் படிக்கும் மாணவர்களும், அதை சார்ந்த பேராசிரியர்களும் ஆர்வலர்களுமே வந்து குழிகளை பார்த்த சென்றனர். தற்போது மற்ற துறையில் உள்ளவர்களும் ஆதிச்சநல்லூரை ரசித்து வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா பார்வையிட வந்தார். அவர் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்காக தோணடப்படும் குழிகளை பார்வையிட்டார். அவருக்கு தொல்லியல் துறையை சேர்ந்த மணி ,அருண் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட மாவட்ட தொழில் மையத்தினை சேர்ந்த அலுவலர்களும் உடன் வந்தனர். இதுபோன்று பல துறையை சேர்ந்தவர்கள் ஆதிச்சநல்லூர் வருவதால் ஆதிச்சநல்லூர் முககியத்துவம் சிறப்பை உணர்த்துகிறது.