செய்துங்கநல்லூரில தி இத்தாலியன் கேக ஷாப் 51 வது கிளை திறப்பு விழா நடந்தது. முகைதீன் மீரான், சையது இப்ராகீம், ஆகியோர் தலைமை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய தெற்கு ஒன்றிய செயலாளர் இசக்கி பாண்டியன், வழக்கறிஞர் நைனா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வகாப் கடையை திறந்து வைத்தார். முதல் விற்பனையை மின்னல் டிரஸ்ட் நிறுவனர் மில்லத் இஸ்மாயில் துவக்கி வைத்தார். சாரா கன்ஸ்டரக்சன் பார்ட்னர் பொறியாளர் ரத்தினகுமார் பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினராக சப் இன்ஸ்பெக்டர் கருத்தையா, செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், விவசாய சங்க தலைவர் குமார், பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, விட்டிலாபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயபதி, நாகர்கோவில் உகாசேவா சேரிட்டபிள் டிரஸ்ட் மருத்துவமனை, ஹிதாயத்துன் நயீம், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அபுபக்கர், அன்னபூரணா உதுமான், அனீஸ் பாத்திமா, பகுதி செயலாளர் அண்டன் செல்லதுரை, மேலப்பாளையம் சேக், தோணி அப்துல் காதர், கேமலாபாத் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோத்தி முசம்பல், கோதர், முகம்மது பாரூக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை முகம்மது இஸ்மாயில் , இமாம் காதர் நியாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


