ஒரே நேரத்தில் காவலராக தேர்வாகியுள்ள 3 சகோதரிகளுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் – ஷகிலா தம்பதியினர். இவர்களுக்கு வைஷ்ணவி, நிரஞ்சனி, ப்ரீத்தி என மொத்தம் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் காவலர் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். இன்று (22/10/2022) திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அலைபேசி வாயிலாக வைஷ்ணவியை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அரசியல் தலைவர் கனிமொழி கருணாநிதிக்கு வைஷ்ணவி நன்றி தெரிவித்தார். இந்நிலையில், வைஷ்ணவி, நிரஞ்சனி மற்றும் ப்ரீத்தி ஆகிய மூன்று சகோதரிகளும் திருவள்ளூரில் காவல் பயிற்சியை முடித்து உள்ளனர். அதே போல, விரைவில் அவர்கள் காவலர் பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிகிறது. அக்கா தங்கைகள் மூவரும் ஒரே நேரத்தில் தமிழக காவல் துறையில் சேர உள்ளதை அந்த கிராம மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமில்லாமல், பொது மக்கள் கூட மூன்று சகோதரிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


