செக்காரக்குடியில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடக்கவிழா நடந்தது.
அனைத்து கிராமங்களிலும் சுகாதாரம் பேனும் வகையில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுரையின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராமலெட்சுமி தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
தொடக்க விழாவில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கியலீலா, பொறியாளர் சித்திரைச் செல்வன், ஓவர்சீயர் சீனிவாசன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 150 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி செயலர் ஆதிமூலப்பெருமாள் நன்றி கூறினார்.


