திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை உள்ளது. இந்த ரயில் பாதை மூலமாக தினமும் 6 முறை பயணிகள் ரயில், செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து செய்துங்கநல்லூர் வரை 10க்கும் மேற்பட்ட ரயில்வே கேட்கள் உள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும் மற்றொரு ரயில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கும் செல்லும். இந்த இரண்டு ரயில்களும் செய்துங்கநல்லூரில் கிராஸிங் ஆகும்.
அப்போது செய்துங்கநல்லூருக்கு கீழ்புறம் உள்ள அய்யனார்குளம்பட்டிக்கு செல்லும் ரயில்வே கேட் லாக் ஆகியது. இதனால் இருபுறமும் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனமும், ஆட்டோவும் அணிவகுத்து நின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆகினர். சிலர் கேட்களை தூக்கி விட்டு கீழே ஆபத்தான முறையில் சென்றனர்.


