தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள குருகாட்டூரில் ஜாலி பிரெண்ட்ஸ் வாலிபர் ஐக்கிய சங்க கட்டிட திறப்பு விழா நடந்தது.
திமுக ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். இதில் மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். சட்ட ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தென்திருப்பேரை நகர செயலாளர் முத்துவீரபெருமாள், ஆழ்வை நகர செயலாளர் கோபிநாத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பால்சித்தர், லிங்கம், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்த், ஒன்றிய துணைச் செயலாளர் கோயில்துரை, ஒன்றிய அவைத்தலைவர் மகரபூசணம், கிளைச் செயலாளர் சோலை நட்டார், மாவட்ட பிரதிநிதி பாலச்சந்திரன், செம்பூர் நயினார், குருசாமி, பூலான், சதீஷ்குமார், தர்மராஜ், ராமன், ராமச்சந்திரன், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


