தூத்துக்குடியில் வருகிற ஆகஸ்டு மாதம் 12, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் துடிசியா சார்பில் தொழிற் கண்காட்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து துடிசியா தலைவர், நேரு பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தொழிற் கண்காட்சி துடிசியா நடத்திக்கொண்டு வருகிறது. தென்கோடியில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இக்கண்காட்சி ஏதுவாக உள்ளது.
இந்த வருடம் ஆகஸ்டு மாதம் 12, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் மன்டபத்தில் வைத்து துடிசியா தொழிற் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சுமார் 180க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழிற்சாலைகள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர். மேலும் வாங்குவோர் விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில் முனைவோருக்கான Start up Programme மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.
வாங்குவோர் விற்போர் கருத்தரங்கில் வ.உ.சி துறைமுகம். கூடங்குளம் அனுமின் நிலையம், DCW, SPIC, NTPL மற்றும் பல நிறுவனங்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். அரசு துறைகளான SIDCO, SIDBI, MSME, TIIC, DIC போன்றவர்களும் இந்தியா முழுவதிலும் இருந்து பல தொழிற்சாலைகள் இதில் கலந்துக்கொள்கின்றனர். நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ. இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது.
இக்கண்காட்சியின் துவக்க விழாவானது ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சன்முகையா ஆகியோர் கலந்துக்கொள்கின்றனர்.


