வல்லநாட்டில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குனர் ஆணைப்படி கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்களின் ஆலோசனைபடியும் உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி விடிவிடி மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது.
மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகள், ஆணும் பெண்ணும் சமம், பெண் சிசுக்கொலை தடுத்தல், பெண் கல்வியை ஊக்குவித்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், வளர்இளம் பெண்கள் ஆரோக்கியத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நல கல்வியாளர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டு உலக மக்கள் தொகை தினத்திற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் சண்முகபெருமாள், சீனிவாசன், சாகிர், ஜெபஸ்டின், ஜான்நேசகுமார், சுகாதார செவிலியர் பாரதி, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வல்லநாடு சுகாதார ஆய்வாளர் சாகிர் செய்திருந்தார்.


