எஸ். பி. சைலஜா (பிறப்பு: சூலை 22, 1953) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி, பின்னணி குரல் கொடுப்பவரும் நடனக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் 5000க்கும் அதிகமான பாடல்கள் பாடியுள்ளார்.
சைலஜா எஸ் பி சம்பமூர்த்தி, சகுந்தலம்மா இணையருக்கு மகளாகக் கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இவருக்கு அண்ணன் ஆவார்.
சைலஜா சுபலேகா சுதாகரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சுதாகர் தெலுங்கு திரைப்பட நடிகரும் தமிழ் சின்னத்திரை நடிகரும் ஆவார். இந்த இணையருக்கு ஸ்ரீகர் (1991) என்ற மகன் உள்ளார்.
சைலஜா அவ்வப்போது இரவல்குரல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார், மேலும் தபு, சோனாலி பெண்ட்ரே மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்காக இரவல்குரல் கொடுத்துள்ளார். சீதாமலட்சுமி திரைப்படத்திற்காக நடிகை ராமேஸ்வரிக்கு இரவல்குரல் கொடுக்கத் தொடங்கினார் .
சைலஜா இயக்குனர் கே. விஸ்வநாத் இயக்கிய தெலுங்கு முயற்சியான சாகரா சங்கமத்தில் நடித்தார். அதில் இவர் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞராக நடித்தார். இது சலங்கை ஒலி என்று தமிழில் மாற்றப்பட்டது.
சைலஜா பாடகர் மனோவுடன் இணைந்து இடிவியில் சரிகமலு தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொடங்கினார். அதன் பின்னர், சைலஜா சோதனை நீதிபதியாக பல உண்மை திறமை வேட்டை நிகழ்ச்சிகளில் விருந்தினர் மற்றும் நடுவராக இருவரும் தோன்றியிருக்கிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் விஜய் டிவி ‘யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் , ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்,ஜெயா டிவி’யில் ஜெயா சூப்பர் சிங்கர், ஜீ தெலுங்கில் சரிகமப லிட்டில் சாம்பியன் மற்றும் சரிகமப போன்றவை ஆகும்.


