ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்புதொழுகை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் மஸ்ஜிதுர்ரஹ்மான் மர்க்கஸ் திடலில் பெருநாள் சிறப்புத்தொழுகை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தலைவர் அசாருதீன் பெருநாள் தொழுகையுடன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில், கிளை தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் கப்பல்மன்சூர், முன்னாள் நிர்வாகிகள் ஷேக்முகமது அலி, மிராசிமீரான், பீர்முஜிப், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் சிக்கந்தர் மற்றும் ளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்பு கொடுத்து ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
இதேபோன்று ஆறாம்பண்ணையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் பள்ளி திடலில் சிறப்புத்தொழுகை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தமீம்அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில், கிளைத்தலைவர் அப்துல்ஹமீது, செயலாளர் அக்பர்ஷா, பொருளாளர் அப்துல்காதர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆறாம்பண்ணை முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் சார்பில் ஈத்கா திடலில் ரமலான் சிறப்புத்தொழுகை ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. தலைமை இமாம் கமருதீன் தலைமையில் சிறப்பு தொழுகை நடத்தினார்.
இதில், பள்ளி வாசல் தலைவர் இமாம்அலி, செயலர் அப்துல்கனி, துணை தலைவர் அப்துல்கனி, பொருளாளர் அபுஉசேன், உறுப்பினர்கள் இப்ராஹிம், அஹம்மது, ஆறாம்பண்ணை பைத்துல்மால் நிர்வாகி நிஜாம், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல்காதர், பண்ணை துபாய்ஜின்னா மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள், ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


