https://mail.google.com/mail/u/0/?tab=rm&ogbl#inbox/FMfcgzGsmDvsvkNKdrmNthvBRWLQKhpm?projector=1
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புத்தகத் திருவிழாவில் பிரத்யேக தொல்லியல்துறை அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து எவ்வாறு பொருட்கள் எடுக்கப்படுகிறது, அங்கு இருந்து கிடைத்து உள்ள பொருட்கள் உள்ளிட்டவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமையை, தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் சிவகளை, ஆதித்தநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூர் ஆகியவற்றில் கிடைத்த முதுமக்கள் தாழி, மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது? என்பது குறித்து மாதிரி செயல்வடிவம் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சிக்கு மக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருந்து இலவசமாக பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் 110 அரங்குகளில் புத்தக பதிப்பகத்தாரின் அரங்குகளும், 10 அரசு துறை அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த திருவிழா வருகிற 01.05.2023 வரை 11 நாட்கள் நடக்கிறது.
இதே போன்று நெய்தல் கலைவிழா வருகிற 28 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை நடக்கிறது.


