நெல்லையில் இருந்து வெளிவந்து தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற நாளிதழாக தி நெல்லை டைம்ஸ் நாளிதழ் விளங்கி வருகிறது. இந்த நாளிதழை முன்னாள் எம்.எல்.ஏ மாலை ராஜா நிரூவியுள்ளார். இதன் பொறுப்பாசிரியராக தம்பானும் , ஆசிரியராக மணியும் உள்ளனர். இந்த நாளிதழில் பிரபல எழுத்தாளர்கள் நாறும்பூ நாதர், மு.வெ.ரா ஆகியோர் தொடர் எழுதி வருகிறார்கள். மேலும் பிரபல எழுத்தாளர் பாப்பாக்குடி செல்வமணி, ஜான்சி பால்ராஜ் ஆகியோர் உள்பட பல்வேறு துறையில் உள்ள எழுத்தாளர்கள், அறிமுக எழுத்தாளர்கள் என பல எழுத்தாளர் இந்த நாளிதழில் கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதி வருகிறார்கள்.அவர்களுக்கு நல்லதொருவாய்ப்பை நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதற்கிடையில் பிரபல எழுத்தாளரும், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளருமான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெருமை மிகு பொருநை கரையில் புதைந்த ரகசியங்கள் என்னும் தொடர் விரைவில் வெளி வர உள்ளது.
இதுவரை 53 நூல்களை எழுதிய முத்தாலங்குறிச்சி காமராசுவின் 43 வது தொடர் இதுவாகும். இந்த தொடரில் இவருக்கும் தாமிரபரணி கட்டுரை எழுத சென்ற போது நடந்த சுவராசியமான சம்பவங்களை விவரிக்கிறார். காத்திருங்கள். விரைவில் இந்த தொடர் வெளி வரவுள்ளது.