கடந்த 20/3/2020 அன்று கொரோனா பரவலைக் காரணம் காட்டி இந்தச் சலுகை ரத்து செய்யப்பட்டது. ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட பல உலக நாடுகளில் முதியோர்களுக்குப் பொதுப் போக்குவரத்தில் 25% முதல் 100% வரை கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தபடி, குறைந்தபட்சம் ‘ஸ்லீப்பர்’ மற்றும் ‘3 ஏசி’ வகுப்புகளிலாவது முதியோருக்கான கட்டணச் சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிய பசிபிக் பிராந்தியம் – APRCEM முதியோர் நலப் பிரிவின் முக்கியப் பொறுப்பாளரும், அமைப்பின் நிறுவனருமான டாக்டர் சங்கர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.