
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் நம்பி ஆற்றங்கரையில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வு மற்றும் சங்க கால கொற்கை துறைமுகத்தின் அடையாளம் காண முன்கள புல ஆய்வு செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாவின் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படிமுதல்கட்டமாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி கிராமத்தில் அகழாய்வு நடைபெற உள்ளது. துலுக்கர்பட்டியில் இருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5 கி.மீட்டர் தொலைவில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இந்த பகுதி விளங்காடு என்று அழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த வாழ்வியல் மேடானது 2.5 மீட்டர் உயரத்தில் 12 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இங்கு செவ்வண்ணம், கருப்பு-சியப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி இட்ட கருப்பு சிவப்பு வண்ணம் ஆகிய மட்கல ஓடுகளும், குறியீடுகள் கொண்ட மட்கல ஓடுகளும். முதுமக்கள்தாழிகளும் கிடைக்கின்றன. இந்த மேட்டில் கிடைக்கப்பெற்றுள்ள அரிய தொல்பொருட்களைக் கருத்தில் கொண்டு அங்கு மறைந்துள்ள பண்பாட்டுக்கூறுகளை கண்டறிய அகழாய்வு செய்யப்படுவதாக தமிழக முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச், ஏப்ரல் – மாதம் வரை இந்த அகழாய்வு நடைபெறவிருக்கிறது.
ஏற்கனவே கடந்த 2010ல் இதே நம்பி ஆற்றங்கரையான சித்தூர் ராஜாக்கமங்கலத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அப்போதைய அமைச்சர் தங்கம்.தென்னரக தலைமையில் அகழாய்வு பணி நடந்தது. இதில் பழையகால சிலைகள், யாளி கதை, தேவி இலைகள், முதுமக்கள் தாழி, பூதேவி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டு திருமலை நாயக்கர் அரண்மனையிலும், பாளையங்கோட்டை,அருங்காட்ரியத்திலும் பொதுமக்கள் பார்வைகாக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்பகுதியில் அகழாய்வு நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று மட்கல ஓடுகளும் வள்ளியூர், தளபதிசமுத்திரம், தங்கையம், சித்தூர் ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பரவி காணப்படுகின்றன.தங்கையம் கிராமத்தில் முதுமக்களின் நாழி மேலோட்டமாக காணப்படுகிறது. மேலும் சித்தூர் தென்கரை மகாராஜர் கோயில் எதிரே உள்ள நம் கரையின் நம்பியாற்றின் மிகவும் பழமை வாய்ந்த இளங்காமணி ஈஸ்வரர் சிவாலயத்தையும் மீட்டு ஆய்வு செய்ய வேண்டும். என தமிழக அரசிற்கு தொல்லியல் ஆர்வளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வள்ளியூரைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆயுள்கால உறுப்பினர் ஆறுமுகம் கூறுகையில்,
நெல்லை மாவட்டம் நம்பியாற்றுபடுகையில் கருப்பு, சிவப்பு, பனையோடுகள் 2 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய முதுமக்கள் தாழி, குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு. சிவப்பு பானை ஓடுகள். தொன்மையான பொருட்கள் மிகுந்த அளவில் காணப்படுகின்றன. உலக நாகரிகத்தில் மிக வும் தொன்மையானது ஆதிச்சநல்லூர் பகுதி. அதேபோன்று நம்பியாற்று கரையோரமும் மிகவும் பழமையான இடமாகும். சித்தூர் கோவில் எதிரே அமைந்துள்ள இளங்கொ மணி ஈஸ்வரர் சிவாலயம் புதையுண்டு காணப்படுகிறது. இந்த சிவாலயம் சுட்ட செங்கலினால் கட்டப்பட்டுள்ளது. அதனை தற்போது வந்தால் பார்க்கலாம். இது கற்கால பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும்.இதனை வெளிக்கொண்டு வந்தால் பலதொன்மையான அரிய வரலாறுகள் தெரியவரும் இக்கோயிலுக்குமுன்பாகநத்தி சிலை உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள இடங்களில் பல தொன்மை வாய்ந்த இலைகள் புதைந்து கிடக்கின்றன. தமிழக சட்ட மன்றத்தில் அகழ்வாராய்சிக்காக தென்பகுதியில் உள்ள இடங்களை தமிழக முதல்வர், தொல்லியல் துறை அமைச்சர் சேர்த்திருப்பது மகிழ்ச்சிக்குறியது. நம்பியாற்றின் கரையில் அகழாய்வு செய்தால் தமி ழரின் கலை பண்பாட்டு நாகரிகம் உள்ளிட்டவை வெளிவரும் என்றார்.