தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே தெற்கு காரசேரி கிராமம் உள்ளது. இங்கு தேசிய காசநோயகற்றும் திட்டத்தின் கீழ் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.
இத்தனை தெற்கு காரசேரி ஊராட்சி மன்றத் தலைவர் மா.பேபி மாரியப்பன் துவக்கி வைத்தார்கள். துணைத் தலைவர் சுந்தர் முன்னிலை வகித்தார். டி.வி.எஸ். இதில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குநர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் இசக்கி மஹாராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதனை தொடர்ந்து நடந்த முகாமில் த்துவக் கல்லூரி ம34 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 5 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில் வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
இதில் சுகாதார ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், எக்ஸ்ரே நுட்பனர் கிறிஸ்டின் குமாரதாஸ், இருட்டறை உதவியாளர் எட்டையா, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, நம்பிக்கை மைய ஆய்வக நுட்புனர்
சந்தனமாரி, வல்லகுளம் இடைநிலை சுகாதார செவிலியர் அக்வினா, சுகாதார தன்னார்வலர் சுவிதா, அரி பாலகிருஷ்ணன், டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சமுதாய வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், கிராம வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், அவார்டு டிரஸ்ட் வெளிப்புற களப்பணியாளர் சந்தன மாரியம்மாள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


