தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரின் தந்தைக்கும் சாயர்புரம் கொத்தலரிவிளை பகுதியைச் சேர்ந்தவர்களான இளங்காமணி மகன் முத்துக்குமார் (22), ஜெயவேல் மகன் முத்துக்குமார் (34) மற்றும் செல்வசேகர் மகன் கோபி மாரிமுத்து (19) ஆகியோருக்கும் கோயில் திருவிழாவில் வரி செலுத்துவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் முத்துக்குமார், மற்றொரு முத்துக்குமார் மற்றும் கோபி மாரிமுத்து ஆகியோர் கடந்த 12.02.2023 அன்று மேற்படி இளம்பெண்ணின் தந்தை இல்லாத நேரத்தில் பெண்ணின் வீட்டின் முன்பு சென்று அப்பெண்னை வெளியே வருமாறு தவறாகபேசி கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டுக்கு வெளியே பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்று அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், மற்றொரு முத்துக்குமார் மற்றும் கோபி மாரிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
மேலும் இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


