கருங்குளம் வட்டாரம், வேளாண்மை உழவர் நலத்துறையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கருங்குளம், வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் அறிவுரையின் படி அங்கக பண்ணையம் குறித்த மாநில அளவிலான கல்வி சுற்றுலாவிற்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கன்னியாகுமரி, இயற்கை வள அபிவிருத்தி நிலையத்திற்கு இந்த விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உர வடிநீர் தயாரித்தல், அசோலா உற்பத்தி, தேனீ வளர்ப்பு ஆகியவை குறித்து ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா செயல்முறை விளக்கமளித்தார்.
ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த முருகன் சாணஎரிவாயு தயாரித்தல், மழை நீர் சேகரிப்பு முறைகள், மூலிகை தாவரங்களின் பயன்கள், மாடித்தோட்டம் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை மேலாளர் ராஜலெட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.


