தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் இந்து மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
திருநெல்வேலி தேசிய மாணவர்படை அதிகாரி சின்ஹா ஆலோசனையின் பேரில் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாமி துவங்கி வைத்தார். பள்ளியின் இணை என்சிசி அலுவலர் வள்ளிக்குட்டி தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் ரத வீதிகள் மற்றும் பஜார் பகுதிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படி பேரணியாக வந்தனர்.
பள்ளி முன்பாக தொடங்கி மீண்டும் பள்ளியில் முடிவடைந்த பேரணியில், தேசிய மாணவர் படை மாணவர்களுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இணை என்சிசி அலுவலர் வள்ளிக்குட்டி செய்திருந்தார்.


