பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வல்லநாடு சாரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் என பல்வேறு போட்டிகள் நடந்தது.
இப்போட்டிகளில் பங்கேற்ற ஸ்ரீவைகுணடம் ஸ்ரீஆதி குமரகுருபரர் சுவாமிகள் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் வினோதினி, அனுஷா, சங்கரி, முகிலா, பவித்ரா, மகேஷ், முத்துலட்சுமி, இசக்கிவேணி, காவியா ஆகியோர் ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்து 10 தங்கப்பதக்கங்களை பெற்றனர்.
இதைப்போல், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று 17 மாணவிகள் வெள்ளிப் பதக்கங்களையும் 12 மாணவிகள் வெண்கல பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் வெற்றிபெற்ற மாணவிகளில் 27 பேர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களான சாந்தா மற்றும் சாவித்ரி ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியம்மாள், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் வாழ்த்தி பாராட்டினர்.


