தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் அனல் மின் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் இன்று வழக்கத்திற்கு மாறாகக் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

அனல் மின் நிலையப் பகுதிகளில் நிலவிய தீவிர பனிமூட்டம் காரணமாக, அங்குள்ள பிரம்மாண்டமான புகைபோக்கிகள் கூட வெளியே தெரியாத அளவுக்குப் பனிப்படர்ந்து காணப்பட்டன. மாலை வேளையில் வெயில் மறைந்து இருள் சூழத் தொடங்கியபோதும், பனிமூட்டம் குறைந்தபாடில்லை.

குறிப்பாக, அனல் மின்நிலையப் புகையுடன் பனிமூட்டமும் ஒன்றாகக் சேர்ந்து திக்கென்று பரவியதால், அப்பகுதி முழுவதும் கடுமையான இருள் சூழ்ந்தது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டதுடன், குளிர்காலச் சூழல் தற்போதே தொடங்கிவிட்டதை இப்பனிப்பொழிவு உணர்த்தியுள்ளது.