தூத்துக்குடியில் நாளை (ஜூலை 22) வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில், பல தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும், தனியாா் நிறுவனத்தினா் தங்களுக்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


