திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 1இல் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, கோயிலை காவல் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் நேற்று பார்வையிட்டு, கோயிலில் விமான தளம், யாக சாலை மண்டபம், பக்தர்கள் தரிசன வரிசை, வாகன நிறுத்தங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடன் ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆய்வின் போது தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந் சின்ஹா, டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி , தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண், திருச்செந்தூர் டிஎஸ்பி குருவெங்கட்ராஜ§, ஆய்வாளர்கள் கனகராஜன், இன்னோஸ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழா மிகப்பெரிய நிகழ்வாக உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி டேவிட்சன் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது முக்கியமான செய்தி. இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கோயில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து மேலும் விவரங்கள் தெரியுமா?