முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் லெட்சுமி நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தோடு இணைந்து ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்த மாவட்ட. மாநில அளவிலான கமிட்டி அனுமதி பெற்று திருப்பணி செய்ய தயார் நிலையில் உள்ளது. முதல் கட்டமாக கடந்த வாரம் இந்த கோயிலில் கிணறு தூர் வாரப்பட்டது. திருப்பணி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 23 ந்தேதி காலை 9 மணிக்கு முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சிறப்பு சுவாதி திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து லெட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து கோஷ்டி பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்மநாபன் சுவாமி, வெங்கடேஷ்வாமி, சேகர் சுவாமி, நம்மாழ்வார் சுவாமி, சுவாமிநாதன், செல்லப்பா, முருகன், தச்சநல்லூர் ஆண்டாள் கோஷ்டிகள், கே.டி.சி நகர் சோமசுந்தரம், உள்பட ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
திருப்பணி கும்பாபிசேகம் வேண்டி மாதந்தோறும் இந்த கோயிலில் சுவாதி திருமஞ்சனம், சிறப்பாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் பக்த சபா சார்பில் அதன் தலைவர் சோமசுந்தரம் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.


