தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல் முன்னிலையில் நடைபெற்றது. .
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாணவியர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இன்று காலையில் தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி அறிவுத் திருக்கோவிலைச் சேர்ந்த சேர்ந்த பயிற்சியாளர்கள் கிருஷ்ணவேணி, மகராசி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைகள் சிறப்பாக செய்திருந்தனர்.


