ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் 21 மே 1991 அன்று தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அதில் 14 நபர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. இவர் விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் இந்தியா இலங்கை உள்நாட்டு போரில், இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெற்றிருந்த காலம்.
ராஜீவ் காந்தியின் படுகொலை விடுதலை புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் தேன்மொழி ராஜரத்தினத்தால் நடத்தப்பட்டது. பின்னர், அவரது உண்மையான பெயர் காயத்ரி எனத் தெரியவந்தது.
ராஜீவ் காந்தி சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சென்னை வந்து, பின்னர் ஒரு வெள்ளை அம்பாசிடரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சார இடங்களை பார்வையிட்டார்.அப்போது அவரை நேர்காணலிட வண்டியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் அவருடன் பயணித்தார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பிரச்சார பேரணியை அடைந்த போது, தனது வண்டியை விட்டு வெளியே வந்து மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வழியில், அவருக்கு பல நல்விரும்பிகள், காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மாலை அணிவித்தனர். 22:21 மணிக்கு கொலையாளி, தானு, அவரை அணுகி வாழ்த்தினார். அவரது கால்களை தொட கீழே குனியும் போது தனது ஆடையின் அடியே வைத்திருந்த ஆர் டி எக்ஸ் (RDX) வெடிபொருளை வெடிக்கச் செய்தார் தானு. ராஜீவ் காந்தி மற்றும் 14 மற்றவர்களும் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அங்கிருந்த ஒரு புகைப்படக்காரரின் புகைப்பட கருவியில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் நடந்து சென்ற பாதை
பாதுகாப்புக் குறைபாடு:
உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தியை கொலை செய்ய புலிகளின் முடிவை அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புலிகளை நிராயுதமாக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவேன் என்று 21-28 ஆகஸ்ட், 1990, சன்டே (Sunday) இதழின் பதிப்பில் அவரது பேட்டியில் கூறியதே காரணம் என்றது. அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்தார்.
ஜூன் 1992 ல் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையில், முன்னாள் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இருந்தன என்றும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இந்த ஏற்பாடுகளை தகர்த்தனர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நரசிம்ம ராவ் அரசு முதலில் வர்மாவின் கண்டுபிடிப்புகளை நிராகரித்தது. ஆனால் பின்னர் அழுத்தத்தின் கீழ் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் ஆணையத்தின் பரிந்துரையின்கீழ் எடுக்கப்படவில்லை.
புலிகளின் பிரதிநிதிகள் 5 மார்ச், 1991 அன்றும் மார்ச், 14 1991 அன்றும் காந்தியை சந்தித்தனர் என்று சுப்பிரமணியன் சுவாமி எழுதியிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்கள்
குண்டுவெடிப்பின் போது மரணமடைந்தவர்கள் 16 நபர்களின் பட்டியல்.
ராஜீவ் காந்தி: முன்னாள் பிரதமர்
தர்மன்: காவலர்
சந்தானி பேகம்: மகளிர் காங்கிரஸ் தலைவர்
ராஜகுரு: காவல் ஆய்வாளர்
சந்திரா: மகளிர் காவலர்
எட்வர்டு ஜோசப்: காவல் ஆய்வாளர்
கே. எஸ் முகமது இக்பால்: காவல்துறைக் கண்காணிப்பாளர்.
லதா கண்ணன்: மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்
டேனியல் பீட்டர்: பார்வையாளர்.
கோகில வாணி: லதா கண்ணனின் பத்து வயது மகள்.
லீக் முனுசாமி: காங்கிரஸ் பிரமுகர்
சரோஜா தேவி: 17 வயது கல்லூரி மாணவர்
பிரதீப் கே குப்தா: ராஜீவ் காந்தியின் பாதுகாப்பாளர்
எத்திராஜூ
முருகன்: காவலர்
ரவிச்சந்திரன்: கமாண்டோ வீரர்
மேலும் காவல் துணை ஆய்வாளர் அனுசுயா டெய்சி உட்பட 43 நபர்கள் காயமுற்றனர்.
புலனாய்வு
படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை காவல்துறை துணை ஆய்வாளர் ராதா வினோத் ராஜு தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கப்பட்டது.


