சுமார் 100 வருடங்களுக்கு பிறகு ஆழிகுடி வெங்கடாஜலபதி திருக்கோயில் திருப்பணி 23 ந்தேதி பாலாலயத்துடன் துவங்குகிறது. ஆழ்வார்திருநகரி ஜீயர் ஸ்வாமி துவக்கி வைக்கிறார்.
ராமாயண காலத்தில் சீதாதேவியை ராவணன் சிறை எடுத்துச் சென்ற போது சீதாதேவி போகும் வழியெங்கும் தான் அணிந்திருந்த ஆபரணங்களை ஒவ்வொன்றாக கழற்றி வீசியபடி சென்றாள். அப்படி அவள் வீசி சென்ற பல ஆபரணங்களுள் ஒன்றான மோதிரம் என்ற கணையாழியைக் கொண்டே சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தை ஆஞ்சநேயர் சுவாமி கண்டுபிடித்தார். அப்படி சீதா தேவி வீசி சென்ற ஆபரணங்களுள் ஆழி ( மோதிரம்) ஒன்று பாண்டிய நாட்டின் வற்றாத ஜுவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகாமையில் ஒரிடத்தில் விழுந்தது. அந்த புனித பூமியே இன்றளவும ஆழிகுடி என போற்றப்படுகிறது.

இந்த புண்ணிய சேத்ரம் ராமாயணத்துடன் நேரடி தொடர்புடையதாகும். இங்குகோவில் கொண்டுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் மிகவும சக்தி வாய்ந்தவர். தன்னை வேண்டுபவருக்கு வேண்டும் வரத்தினை விரைந்து அளிப்பவர். இத் திருத்தலத்தை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் தொலைந்து போன உறவு நகை, பணம் பொருள் எதுவாயினும் விரைவில் நம்மிடமே வந்து சேரும் என்பது ஜதீகம் . சுமார் 100 வருடங்களுக்கு முன்பு மிகப்பிரமாண்டமாக விளங்கிய இந்த கோயில் நாளடைவில் சிதிலமடைந்து விட்டது. தற்போது இந்து சமய அறநிலைய துறை சார்பாக இந்த கோயிலுக்கு திருப்பணி செய்ய பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வருகிற 22-04-2023 சனி கிழமை மாலை 4.00 மணி முதல் 10.00 மணி மற்றும் 23-04-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 முதல் 8.00 மணி வரை பாலாலயம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறவுள்ளது. இந்த பூஜையில் ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் கலந்துகொண்டு ஆசிர்வதிக்க உள்ளார். கோயில் பூஜைகளை பெரிய திருவடி பட்டர் செய்து வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அஜீத் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். கோயிலுக்கு தேவையான கைங்கர்யம் செய்ய 7010863361 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


