[21/04, 3:59 pm] Muthalankurichi Kamarasu: https://youtu.be/b8Oi2X1eMYY
[21/04, 4:05 pm] Muthalankurichi Kamarasu: என் அன்பு சகோதரி கனிமொழி எம். பி அவர்கள் தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக என்னை அழைத்து தொல்லியல் கூடத்தை திறக்க அனுமதி கொடுத்தார். மிக்க நன்றி சகோதரி, நல்ல அறிமுகம் தந்த மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில் ராஜ் அவர்களுக்கும் நன்றி. அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
தூத்துக்குடியில் 4 வது புத்தக கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை திறந்துவைத்த கனிமொழி எம்.பி. அருகில் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆதிச்சநல்லூர், சிவகளை,கொற்கை மாதிரி அருங்காட்சியகத்தினை திறக்க வந்தார். அப்போது அருகில் இருந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை அழைத்து நீங்கள் இந்த அரங்கை திறந்து வையுங்கள் என கூறினார். இந்த நிகழ்ச்சி அருகில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. எம்.பி. அவர்கள் எழுத்தாளரை கௌரவிக்கும் விதமாக செய்த இந்த செயலை அனைவரும் பாராட்டினார். அதன் பின் கனிமொழி எம்.பி அருங்காட்சியகத்தினை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சி தலைவர்மரு.கி செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, மாவட்ட காவல் துறை கண்பாணிப்பாளர் யோக பாலாஜி சரவரணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆதிச்சநல்லூர் குறித்து விளத்தினை தொல்லியல் ஆய்வாளர் ஆசைதம்பியும், கொற்கை குறித்து தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரையும், சிவகளை குறித்து தொல்லியல் ஆய்வாளர் பிரபாகரனும் விளக்கமளித்தனர். தொல்லியல் ஆய்வாளர் காளிஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


