செய்துங்கநல்லூர் யூனியனில் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் யூனியன் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார சமூகநலத்துறை அலுவலர் பாக்கியலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருங்குளம் வட்டார அளவில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் 162 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டதாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் 10, 12 படித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் வழங்கினார்.