ஆத்தூரில் தியாகி இம்மானுவேல் சேகரனார் 69-வது நினைவு நாளை முன்னிட்டு தவெக தெற்கு மாவட்டச் செயலாளர் பிரைட்டர் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விடுதலைப் போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவருமான தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பிரைட்டர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் ஆத்தூர் பேரூர் கழகச் செயலாளர் செல்வமுருகன், ஆழ்வை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெபபிரபு, திருச்செந்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் நீதிபாலன் கார்த்திக், ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் நிவாஸ் கண்ணன், திருச்செந்தூர் தெற்கு நகரப் பொறுப்பாளர் வினோத், மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பேர்ல்ஸ் மபத்லால், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, பேரூர் கழகத் துணைத் தலைவர் பூ இசக்கி, ஒன்றியத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் பாலாஜி, செல்வா, பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


