ஏரல் வட்டத்தில் ஆக.21 மற்றும் 22ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களை நாடி, அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் பொருட்டு அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்ட ஆய்வு பணிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏரல் வட்டத்தில் 21.08.2024 மற்றும் 22.08.2024 ஆகிய தினங்களில் நடைபெறுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 21.08.2024 அன்று மாலை 04.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை பெற்றுக் கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களுக்காக இத்திட்ட ஆய்வுப்பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்வு ஆகியவை அன்றைய தினங்களில் நடைபெறாது எனவும், ஆய்வுப்பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் நிகழ்வு ஆகியவை நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.


