தூத்துக்குடியில் கல்லூரி மாணவரை தாக்கிய பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் நேசமணி என்பவரை தாக்கியதாக பேராசிரியர்கள் சீனிவாச மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகியோரை உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி காமராஜ் கல்லூரியில் வாசலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


