செய்துங்கநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவர் அபு ஹபைஸ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி நவாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அனைத்து கிளை அனைத்து கிளை நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகளை காலை 7:30 மணி முதல் 9:30 வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அச்சமற்ற பயணத்தை மேற்கொள்ளும் வகையில் கூடுதலாக இயக்க வேண்டும், செய்துங்கநல்லூரில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பேருந்து நிறுத்தும் இடத்தில் பேருந்துகள் நிற்காமல் காவல்நிலையத்திற்கு முன்பும், கரூர் வைசியா பேங்க் எதிர்ப்புறம் நிற்பதனால் கிடைக்கக்கூடிய பேருந்தில்கூட ஏற முடியாத அவல நிலை நீடித்து வருகிறது இதனை சரி செய்து தர வேண்டும், செய்துங்கநல்லூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் பயணிகள் நிழற்குடை மோசமான நிலையில் இருப்பதால் உடனடியாக அதனை அகற்ற வேண்டும் என மூன்று தீர்மானத்தை திருநெல்வேலி பேருந்து டிப்போ அதிகாரிகளிடம் மனுவாக அளிக்க வேண்டும் என தீர்மானம் ஏற்றப்பட்டது.


