செய்துங்கநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மக்கள் சங்கமம் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
75 வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தொடர் முழக்க பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் சங்கமம் என்ற முழக்கத்தோடு நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் மக்கள் சங்கமம் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
ஒற்றுமை கீதம் மற்றும் கிராஅத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த பொதுக்கூட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஸ்ரீவைகுண்டம் பகுதி தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செய்யது அலி கரீம், செய்துங்கநல்லூர் ஜமாத் செயலாளர் பாசுல் சமீர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், மியாகான் பள்ளி ஜமாத் செயலாளர் செய்யது மீரான், கொங்கராயங்குறிச்சி ஜமாத்துணை தலைவர் சாகுல்ஹமீது, க.பா.மு.ஜக்கரிய்யா, செய்துங்கநல்லூர்1வது வார்டு கவுன்ஸிலரும், SDPI மாவட்ட செயற்குழு உறுப்பினருமான நவாஸ், கருங்குளம் ஒன்றிய கவுன்ஸிலர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா செயல்வீரர் வாசிம் அக்ரம் வரவேற்புரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தூத்துக்குடி மாவட்ட தலைவர் அப்துல்காதர் துவக்க உரையாற்றினார்.

செய்துங்கநல்லூர் முஹைதீன் ஜாமியா பள்ளி பேஷ் இமாம் மௌலவி ஹசன் ஞானியார், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் ஏவிஏ கஸாலி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, எஸ்டிபிஐ கட்சியின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயற்குழு உறுப்பினர் கல்வத் அஹமது கபீர், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் முஹம்மது நாஸிம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினரும், புதிய விடியல் இணை ஆசிரியருமான ரியாஸ் அஹமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். செய்துங்கநல்லூர் யூனிட் தலைவர் தமிமுன் அன்சாரி நன்றியுரை ஆற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டோருக்கு பரிசுகளும், வெற்றிபெற்றவர்களுக்கும் தங்க நாணயம், மற்றும் ரொக்க பரிசுகள் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பொதுக்கூட்டத்தில் ஜமாத்தார்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு பொதுமக்கள் உட்பட 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


