தாமிரபரணி இலக்கியப் பேரவை யின் சார்பில் தூத்துக் குடி மாவட்டம் ஏரல் ஊரில் விஸ்வகர்ம கலைக் கூட அரங் கில் படைப்பாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதழாளர் இசைக்கும் மணி யின் 75 ஆம் அகவை -பவள விழா நிகழ்வும் மற்றும் படைப்பாளர்களுக்கு பாராட்டும், “படை ப்பு ஆளுமை ” விருதும் பொற்கிழியும் , நூல்கள் பரிசளிப்பும் பயனாடை அணிவித் தலும் உள்ளிட்ட சிறப்புகள் செய்யப்பட்டது.
தேரிக்காட்டு இலக்கி யவாதி கண்ண குமார விஸ்வரூபன் (எ) ஆறுமுகப் பெருமாள், மூக்குப்பீறி கவிஞர் தேவதாசன், இதழாளர் இசைக்கும்மணி,கவிஞர் ஏரல்ராஜன் உள்ளிட்ட படைப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
கலை இலக்கியப் பெருமன்றத்தின்மாநிலக்குழு உறுப்பினர் , வழக்கறிஞர் பெ. கணபதி சுப்பிரமணியன், தாமிரபரணி இலக்கி யப்பேரவையின் ஒருங்கிணை ப்பாளர் பதிப்பாசிரியர் வீர. பாலன், உள்ளிட்டோர் வாழ்த்துரைத்தனர்.
ஏரல் லோபா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி நிறுவனர் லோபா முருகன் சிறப்புரைத்து பேசினார்.
ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி மேநாள் உறுப்பினர் இரட்டைமுத்து தலைமை யில் நடைபெற்ற நிகழ் வில், “மாலை டோர்ஸ்”நிறுவன கார்த்திகேயன் வரவேற்றுப் பேசினார்., கவிஞர் ஏரல்ராஜன் நிகழ்வை ஒருங்கிணைத்திட்டார்.
தென்கரை மகராஜன் நன்றி தெரிவித்தார். நிகழ்வில் படைப்பா ளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேரவையினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.