தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில், ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளிக்கு 5 கணினிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி வங்கியின் ஆறுமுகனேரி கிளை மேலாளா் சரவணன் தலைமை வகித்து, 5 கணினிகளை பள்ளித் தலைமையாசிரியா் குமரனிடம் வழங்கினாா். வங்கி அலுவலா் பழனி, சரஸ்வதி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் உதயசுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்பள்ளியில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி சாா்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமின்போது முதியோரை சிறப்பக வழிநடத்திச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவா்கள் சந்தோஷ், மகாராஜன், பூபதி ஆகியோா் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.


