தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின், 110வது இ-லாபி விருதுநகரில் துவக்கப்பட்டது. விழாவில் டிஎம்பி யுவா டெபிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாக்க கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 110வது 110வது இ-லாபி திறப்பு விழா விருதுநகர் விவி வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் இ-லாபியை திறந்து வைத்தார். மேலும், கல்லூரி மாணவியர்களுக்கான பிரத்தியேக டிஎம்பி யுவா டெபிட் கார்டை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் வருமான வரி முதன்மை ஆணையர் செல்வ கணேஷ், மகேந்திரன், தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர், சிவபாலேஸ்வரி, செயலாளர் கோவிந்தராஜப் பெருமாள், துணை செயலாளர் லதா, பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி வளாகத்தில் இந்த கார்டு மூலம் கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கும், மேலும் கல்லூரியில் பணமற்ற பரிவர்த்தனை முன்னெடுக்கும் முயற்சியாக மேற் கொள்ளப்படுகிறது.


