பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே (பிப்ரவரி 19, 1627 – ஏப்ரல் 3, 1680, மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். போன்சலே மராத்திய குலத்தவரான சாகாஜிபோன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாகாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.
இந்து சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போன்சலே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கு இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.
சிவாஜி மகாராஜாவின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய பேரரசின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் பேரரசால் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்குவதிலும் , ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது. இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை. ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களுக்கு யுத்தத்தின்போது கொடுமை செய்தல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார்.
மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச் சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.
அவரின் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் “இந்திய கடற்படையின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.
சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் ஆகியோரின் இளைய மகன் ஆவார். சிவாஜி மகாராஜின் பிறந்த தேதியைக் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் 1627 பிப்ரவரி 19 என்று கருதப்படும் நாள் சமீபத்தில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் பூனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார்.
அக்கோட்டையின் பெண்தெய்வமான ஷிவை என்பதன் நினைவாக சிவா என்று பெயரிடப்பட்டார். ஜிஜாபாய்க்கு சிவாஜி மகாராஜ் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார், அவர்களில் மூவர் மழலையிலேயே இறந்துவிட்டனர், சிவாஜி மற்றும் வெங்கோஜி என்ற ஏகோஜி மட்டுமே உயிரோடு இருந்தார். வெங்கோஜி பின்னர் தஞ்சாவூரில் மராத்திய அரசை நிறுவினார்
சிவாஜி மகாராஜ் பெரும்பாலும் அவர் அன்னையுடன் இருந்தார், வெங்கோஜி அவர் தந்தையுடன் பெங்களூரில் (தற்போது பெங்களூரூ) வசித்து வந்தார். சிவாஜி மகாராஜ் பிறந்த காலத்தில், மகாராஷ்டிராவின் அதிகாரம் பிஜாப்பூர் சுல்தானியம், அஹ்மதாபாத் சுல்தானியம் மற்றும் கொல்கொண்டா சுல்தானியம் ஆகிய மூன்று சுல்தானியங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. அப்போதிருந்த பெரும்பாலான மராத்தியர்களின் படைகள், அவர்களின் உடைமைகளை இந்த சுல்தானியங்களில் ஒன்றிடம் பிணையமாக வைத்திருந்தார்கள் மற்றும் பரஸ்பர நட்பு மற்றும் பகைமைகளின் ஒரு தொடர்ச்சியான விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
சிவாஜியின் தந்தை சஹாஜி போன்சலே, வேரூலில் (தற்போது மகாராஷ்டிராவின் எல்லோரா) இருந்த மலோஜி போஸ்லேயின் மூத்த மகனாவார். நிஜாம்ஷாஹியில் இருந்த ஒரு சர்தாரான லக்கூஜிராவ் ஜாதவ் தம் மகளான ஜிஜாபாயின் (சிவாஜி மகாராஜின் அன்னை) திருமணத்தை அவர் மகனான சஹாஜிக்கு முடித்து வைக்க மறுத்த விவகாரத்தில், லக்கூஜிராவினால் மலோஜி போஸ்லே அவமதிக்கப்பட்டதாக கருத்துக்கள் உள்ளன. இது நிஜாம்ஷாஹியின் கீழ் உயர்ந்த மதிப்புகளையும், ஒரு முக்கிய பொறுப்பையும் பெற வெற்றி பெறுவதற்கு மலோஜியை இட்டு சென்றது, இது தவிர்க்க முடியாமல் அவரை மான்சாப்தார் (இராணுவ தளபதி மற்றும் ஒரு ஏகாதிபத்திய நிர்வாகி) பட்டத்தைப் பெறவும் இட்டு சென்றது. இந்த புதிய புகழ் மற்றும் அதிகாரத்தைப் பெற்றதால், ஜாதவ்ராவ் அவரின் மகளை தம் மகன் சஹாஜிக்கு திருமணம் முடிக்க அவரை மலோஜி போஸ்லேவினால் சமாதானப்படுத்த முடிந்தது.
சஹாஜி பல்வேறு தக்காண யுத்தங்களில் அவர் தந்தை வகித்த ஒரு முக்கிய பாத்திரத்தை தொடர்ந்து ஏற்று சென்றார். அவர் அஹ்மதாபாத்தில் உள்ள இளம் நிஜாம்ஷாவுடனும், 1600ன் மொகலாயர்கள் தாக்குதலின் போது அவர்கள் பெற்ற மாவட்டங்களை மீண்டும் நிஜாம்ஷாவிற்காக வென்றெடுத்த நிஜாமின் மந்திரி மலிக் அம்பருடனும் இணைந்து தம் சேவையைத் தொடங்கினார்.அதிலிருந்து, லாகூஜி ஜாதவ், சஹாஜியின் மாமனார் சஹாஜியைத் தாக்கினார், அத்துடன் அவரை மஹூலி கோட்டையில், நான்கு மாத கர்ப்பிணியான ஜிஜாபாயுடன் சேர்த்து முற்றுக்கையிட்டார். நிஜாமிடமிருந்து எந்த உதவியும் வராததைத் தொடர்ந்து, சஹாஜி கோட்டையை விட்டு விட்டு, தப்பிவிட திட்டமிட்டார். அவர் தமது கட்டுப்பாட்டில் இருந்த சிவனேரி கோட்டைக்கு ஜிஜாபாயைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அங்கு, சிவனேரியில் தான் சிவாஜி மகாராஜ் பிறந்தார். இதற்கிடையில், லாகூஜியின் கடமையில் சந்தேகப்பட்டு, லாகூஜியும், நிஜாம்ஷாவின் படைகளில் சேர வந்திருந்த அவர் மூன்று மகன்களும், அவர்தம் நீதிமன்றத்தில் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சஹாஜி ராஜே, நிஜாம்ஷாஹி சுல்தானியத்தில் இருந்து விலகி செல்ல முடிவெடுத்தார், மற்றும் சுதந்திர பதாகையை உயர்த்தினார். அத்துடன் ஒரு சுதந்திர பேரரசை உருவாக்கினார்.
இந்த நிகழ்வுகளுக்குப்பின் பின்னர் அஹ்மதாபாத் மொகாலய சக்ரவர்த்தி ஷா ஜஹானிடம் வீழ்ச்சி அடைந்தது, அதன்பின்னர் குறுகிய காலத்தில் நிஜாமின் தளபதியாக இருந்த சஹாஜி மொகாலய படைகளைத் தாக்கி அந்த பகுதியின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்தார். இதனால் திரும்பவும் அந்த பகுதியைக் கைப்பற்ற ஒரு பெரிய படையை 1635ல் அனுப்பினர் மொகாலயர்கள், இதனால் மஹூலிக்குள் சஹாஜி பின்னடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 1636ஆம் ஆண்டில் இந்த பகுதியை ஆள்வதற்கு அதிகாரத்தை மீட்டு கொடுத்ததற்காக மொகலாயர்களுக்கு திறை செலுத்த பிஜாப்பூரின் அடில்ஷா உடன்பட்டார். அதன்பின்னர், பிஜாப்பூரின் அடில்ஷாவால் சஹாஜி சம்பிரதாயப்படி பதவியில் அமர்த்தப்பட்டார். மேலும் ஒரு தொலைதூர ஜாகிர் நிலவுடைமைகள் (தற்போது இது பெங்களூர்), இவருக்கு அளிக்கப்பட்டன, அத்துடன் பூனேயில் இருந்த அவரின் பழைய நிலங்களையும், உடைமைகளையும் வைத்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்.