நவத்திருப்பதி ஸ்தலங்களில் 2வது ஸ்தலமான நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாவகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவத்திருப்பதி ஸ்தலங்களில் இரண்டாவது ஸ்தலமாக விளங்குவது நத்தம் விஜயாசன பெருமாள் திருக்கோயில். இந்த கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத எம்இடர்கடிவான் அருள்பாலிக்கின்றனர்.இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பிரம்மோற்சவத் திருவிழா சிறப்பானதாகும். இத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்தடன் துவங்கியது.12 தினங்கள் சிறப்பாக நடைபெறும் பிரம்மோற்சவத்தில் உற்சவா¢ எம்இடர்கடிவான் நாள்தோறும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா எழுந்தருளிகின்றார்.5ம் திருநாளான இன்று காலை உற்சவர் எம்இடர்கடிவான், தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் பெரிய திருவடியான கருடன் மீது சிறப்பு அலங்காரத்தில் எம்இடர்கடிவான் அருள்பாலித்தார். அத்யாபக கோஷ்டியினா¢ தமிழ்வேதமான பிரபந்த பாடல்கள் பாட குடைவரை வாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் கருடவாகனம் வீதி புறப்பாடு நடந்தது. கருட வாகன சேவையினை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 25ம் தேதி புஷ்பயாகத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.


