தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில் எம்.எம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் வளாகத்தில் நேற்று இரவு 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.விழாவில், படிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்.எம் பப்ளிக் சேரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, முகமது அலி அப்துல் காதர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
இறுதியாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் 25வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.


