
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கும்பகோணம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக உள்ளார்.
ரவிச்சந்திரன் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப் ரிஜிஸ்டராக கடந்த 2 ஆண்டுகளாக பணி செய்துள்ளார்.
பத்திரப்பதிவின் போது பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி சோதனையிட்டதில் அவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து கும்பகோணம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் மேலாளராக பணி இடமாற்றம் செய்யப்படார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ரவிச்சந்திரன் அவரது மனைவி சுதா மற்றும் மாமனார் சுந்தரராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 6 வீடுகளில், முதற்கட்டமாக ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவரது மாமனார் சுந்தரராஜன் ஆகியோரது இரண்டு வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சுதா, ஜெயராணி ஆகியோர் தலைமையிலான இரண்டு வாகனங்களில் வந்த 15 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.