சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் உயர் அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் வணிக வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் சலீ எஸ். நாயர், மற்றும் உயர் அதிகாரிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் (MD & CEO) சலீ எஸ். நாயர், செயல் இயக்குனர் எம்.டி. வின்சென்ட், செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக்குமார் மற்றும் சென்னை மண்டல மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக வங்கி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


