செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. தென்னகத்தில் சிதம்பரம் எனப்போற்றப்படும் இந்த கோயிலில் சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. குமுதல் பக்தி ஸ்பெஷல் மற்றும் சி. ஆர். டி தங்க நகை ஸ்தாபனம் இணைந்து நடத்திய இந்த திருவிளக்கு பூஜையில் ஏரளானமான பெண்கள் கலந்துகொண்டனர். தோஷங்கள் நீங்கிட, மாங்கல்ய பாக்யம் கை கூட, மழலைப் பேறு பெற்றிட, லட்சுமி கடாட்சம், மகிழ்சி என்றென்றும் நிலைத்திட நாட்டிலும் வீட்டிலும் நிம்மதி, சந்தோஷம் , உற்சாகம் நிறைந்திட இந்த பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குருமாரியப்பன் செய்திருந்தார். பூஜை செய்பாடுகளை அர்சகர் முத்துராமன் செய்திருந்தார். இந்த ஆலயத்தில் ராஜ கோபுரம் கட்டுவதற்கான நடவடிக்கையை பக்தர்கள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


