செய்துங்கநல்லூரில் இயங்கி வரும் மிகச்சிறந்த கல்வி நிறுவனம் ஜோஸ் மெடரிக் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற்றுள்ளனர். 494 மதிப்பெண்ணை இவாஞ்சலின், பௌசியா ஸ்ரீன் என்ற இரு மாணவிகள் பெற்றுள்ளனர். மகாலெட்சுமி என்ற மாணவி 493 மதிப்பெண்ணை பெற்றுள்ளார். மேலும் தமிழ் பாடத்தில் இரண்டு மாணவிகள் சென்டமும், ஆங்கிலத்தில் இரண்டு மாணவிகள் 99 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 6 மாணவ மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். அறிவியியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணை ஐந்து மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் ஐந்து மாணவ மாணவிகள் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகள், தேர்வுக்கு காரணமாக உழைத்த பள்ளி முதல்வர் ஜெய்துன் பீவி மற்றும் ஆசிரியர்களை இந்த பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.


