செய்துங்கநல்லூரில் பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் வேலு இவரது மகன் அங்கப்பன் (43). விவசாயி. இவர் நேற்று தாதன்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பாம்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


