தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகன் சுடலைக்கண்ணு(27). இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகியுள்ளது. சுடலைக்கண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை கால்வாய் கிராமத்தில் உள்ள முண்டசாமி என்பவரின் வாழைத்தோட்டத்திற்கு சுடலைக்கண்ணு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரைத்தேடிச் சென்றனர்.
அங்கு வாழைத்தோட்டத்தில் சுடலைக்கண்ணு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சுடலைக்கண்ணு வலிப்பு நோயால் இறந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இகுறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


