தூத்துக்குடியில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ள கமலவேல் மஹாலை கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் புத்தக திருவிழா நடைபெற உள்ள ஏவிஎம் கமலவேல் மஹாலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் முன்னிலையில் இன்று (17.11.2022) பார்வையிட்டு தெரிவித்ததாவது: தூத்துக்குடி 3ஆம் புத்தக திருவிழா 22.11.2022 முதல் 29.11.2022 வரை யு.ஏ.ஆ கமலவேல் மஹாலில் நடைபெறுகிறது. புத்தக திருவிழாவின் ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் உள்ள சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் தங்களது எழுத்து மற்றும் வாசிப்பு அனுபவம் மற்றும் தங்களது பயணங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள்.
எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், சோ.தர்மன் மற்றும் உள்ளூர் எழுத்தாளர் கவிதா முரளீதரன் உள்பட பல்வேறு எழுத்தாளர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அனைவரும் பங்கேற்று புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
ஆய்வில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், துத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தி.சாருஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பீவி ஜான், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அமலா, மாநகராட்சி பொறியாளர் பிரின்ஸ், ஊரக வளர்ச்சி முகமை உதவி பொறியாளர் தளவாய், ஆகியோர் கலந்துகொண்டனர்.


