தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெய்வச்செயல்புரம், மணக்கரை, வல்லநாடு, பக்கப்பட்டி ,உழக்குடி ஆகிய பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா தெய்வச்செயல்புரத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு 100நபர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மணக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மலை பார்வதி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயருக்கு அர்ச்சனை செய்து பூஜை வழிபாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
வல்லநாடு சாது சிதம்பர சாமி கோவிலில் வைத்து கோ பூஜை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பெயருக்கு அர்ச்சனை செய்து பொதுமக்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது
பக்கப்பட்டி கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உழக்குடி கிராமத்தில் பத்திரகாளி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர் குமார் , அரசு தொரப்பு பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத்தலைவர் போத்திராஜ்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர்முருகன்,OBC அணி மாவட்ட பொது செயலாளர் , வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் மாரியப்பன், விவசாய அணி மாவட்ட துணை தலைவர் முனியசாமி ,கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் அழகுராஜ், நெசவாளர் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பட்டியல்ட மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய பட்டியல் பிரிவு மாரியப்பன், தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில்குமார் ,இளைஞர் அணி பொதுச்செயலாளர் சிம்பரசன் ,IT பிரிவு ஒன்றிய தலைவர் ஹரிஹரசுதன் மற்றும் செல்வம் ,விவசாய அணி மாரிமுத்து,பேச்சி , வர்த்தக பிரிவு சேதுராமன் மற்றும் ஆவுடையப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


